ஆமிர்கான் இடத்தில் அஜித்தான் – பிரபல நடிகையின் கருத்தால் சர்ச்சை!

ஆமிர்கான் இடத்தில் அஜித்தான் – பிரபல நடிகையின் கருத்தால் சர்ச்சை!

Tamil-cinema-latest-news

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.

உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது. மேலும் முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் எடுத்தால் அதில் எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என ரசிகர் ஒருவர் நடிகை நீத்து சந்திராவிடம் டிவிட்டரில் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், ” அஜித்தான் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார்.

அவர் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். அவரால் இந்த கதாபாத்திரத்தை செய்யமுடியும் எனவும் அதற்கு அவர் விளக்கம் தந்துள்ளார். பின் வழக்கம்போல் ரசிகர்கள் இணைய போரில் ஈடுப்பட்டனர்.

123 total views, 1 views today