என்னப்பா இது லக்ஷ்மி மேனனுக்கு வந்த சோதனை..!

இணைய தளத்தில் அதிகம் பேரால் பார்க்கக்கூடிய தமிழ் சினிமாவின் தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளுங்கள் 

என்னப்பா இது லக்ஷ்மி மேனனுக்கு வந்த சோதனை..!

lakshmi-menon

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் எல்லா நடிகைகளுமே அங்கு ஓரிரு படங்களில் நடித்த பிறகுதான் தமிழுக்கு வருவார்கள். அப்படித்தான் லட்சுமிமேனனும், ரகுவிண்டே ஸ்வந்தம் ரசியா, ஐடியல் கப்புல் ஆகிய மலையாள படங்களில் நடித்த பிறகுதான் தமிழில் சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தில் கமிட்டானார்.

அதன்பிறகு பிரபுசாலமனின் கும்கியில் நடித்தார். அப்படி அவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே ஹிட்டானதால் ராசியான நடிகையாகி விட்டார் லட்சுமிமேனன்.

பின்னர், குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் என அவரது வெற்றிப்படங்கள் தொடர்ந்தபோதும், மிருதன், றெக்க பெரிதாக ஓடவில்லை. இந்த நிலையில், தற்போது ஜீவாவுடன் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற ஒரு படம் மட்டுமே லட்சுமிமேனனின் கைவசம் உள்ளது.

இந்த நேரத்தில், றெக்க படத்தில் நடித்தபோது லட்சுமிமேனனின் உடல் பெருத்து காணப்பட்டதால், அவரை உடம்பை குறைத்து விட்டு வருமாறு ஜீவா படக்குழுவில் கூறி அனுப்பி விட்டார்களாம். அதனால், கேரளா விரைந்த லட்சுமிமேனன், தற்போது டயட்ஸ், உடற்பயிற்சி என்று தீவிரமடைந்திருக்கிறாராம்.

மேலும், இந்த நேரத்தில் தாய்மொழியான மலையாளத்திலும் ஒரு கால் பதித்து விட வேண்டும் என்று அங்குள்ள சில டைரக்டர்களிடம் படவேட்டை நடத்தி வருகிறாராம் லட்சுமிமேனன். ஆனால், ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு மலையாளத்தில் திலீப்புடன் அவர் நடித்த அவதாரம் படம் தோல்வியடைந்ததால், லட்சுமி மேனனுக்கு சான்ஸ் கொடுக்க அங்குள்ள டைரக்டர்கள் தயக்கம் காட்டு கிறார்களாம்.

147 total views, 1 views today