என் விவகாரத்திற்கு தனுஷ் காரணமா? உண்மையை உடைத்த அமலா பால்

என் விவகாரத்திற்கு தனுஷ் காரணமா? உண்மையை உடைத்த அமலா பால்

Tamil-cinema-latest-news

பிரபல நடிகை அமலாபால் இயக்குனர் விஜய் யை கடந்த வருடம் தொடக்கத்தில் மணம் முடித்து சில மாதங்களுக்கு முன்பு மனக்கசப்பால் பிரிந்தார். இது பற்றி பல தடவை தன் கருத்தை பதிவு செய்தார் அமலாபால்.

இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் தனுஷுடன் அமலாபாலை இணைத்து பேசி வருகிறார்கள். இது பற்றி முதல் முறையாக மனம் திறந்துள்ளார் அமலா. இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் எனக்கு ரொம்ப அசிங்கமாகவும் மனக்கஷ்டமாகவும் இருந்தது, தனுஷ் என்னை விஜய்யுடன் சேர்த்து வைக்க தான் நினைத்தார், இத்தனைக்கும் சில முயற்சிகளை தனுஷ் எடுத்தார்.

அதன் பின் எந்த ஒரு வாய்ப்புக்கும் நான் தனுஷை தேடி போகவில்லை, வடசென்னை, வி.ஐ.பி 2 என்னை தேடி வந்த வாய்ப்பு, சில விஷயங்கள் எனக்கும் விஜய்க்கும் ஒத்து போகவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

133 total views, 1 views today