‘தல’ வீட்டு இளவரசி..ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் உணவு..! அதான் அஜீத்..!

‘தல’ வீட்டு இளவரசி..ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் உணவு..! அதான் அஜீத்..!

Tamil-cinema-latest-news

தமிழ் திரையுலகில் மனிதம் நிறைந்த நடிகர்கள்,நடிகைகள்,இயக்குனர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.த்ரிஷா,ஹன்சிகா,சமந்தா,ராகவா லாரன்ஸ்,இளையதளபதி விஜய்,பிரகாஷ் ராஜ்,காமெடி நடிகர் செந்தில் என உதவும் குணம் கொண்டவர்கள் அதிகம்.

குறிப்பாக தல அஜீத் பற்றி ஒரு அபூர்வ தகவல் உண்டு.சத்தமே இல்லாமல் உதவி செய்வதில் அஜீத்துக்கு இணை அஜீத்தான்.

வருடா வருடம் எந்த நாட்டில் இருந்தாலும் கிறிஸ்துமஸ் நாளில் சென்னைக்கு வந்து விடுவார் தல.

அதற்கு முன்பே அஜீத்தின் இல்லத்தரசி ஷாலினி சில ஏற்பாடுகளை பண்ணி விடுவார். இரவு தேவாலயம் போவார்கள்.பிரார்த்தனை முடிந்து அதிகாலை இல்லம் திரும்புவார்கள்.

காலை உணவு கிடையாது. குழந்தைகள்,மனைவியுடன் காரில் புறப்படுவார். சென்னைக்கு ஒதுக்குப்புறமான அந்த ஆதரவற்ற குழந்தைகள் பள்ளியில் போய் கார் நிற்கும்.

ஆயிரத்து ஐநூறு குழந்தைகள் படிக்கும் பள்ளி அது. இவர்கள் போய் இறங்கியதும் அங்கு அறுசுவைஉணவு ஆயத்தமாக இருக்கும்.

உதவியாளர்கள் பெரிய கேக் வாங்கி வைத்திருப்பார்கள்.குழந்தைகள் கூடுவார்கள். அஜீத் வீட்டு குட்டி இளவரசி கேக் வெட்டி குழந்தைகளுக்கு கொடுப்பார். அத்தனை குழந்தைகளும் பிரேயர் பண்ணுவார்கள்.

அதன் பின் அசைவ பிரியாணி ரெடியாக இருக்கும் . தல, மனைவி, குழந்தைகள் அந்த ஆதரவற்ற குழந்தைகளோடு அமர்வார்கள்.

ஒன்றாகச் சாப்பிடுவார்கள். அத்தனை குழந்தகளுக்கும் ஐஸ் கிரீம் வந்து சேரும். இரண்டு மணி நேரங்கள் தல வீட்டு குட்டி இளவரசி அந்த குழந்தைகளுடன் விளையாடும்.

சிரித்து மகிழ்ந்து பின்னர் பரிசுப் பொருட்கள் கொடுப்பார்கள், விடைபெறுவார்கள்.

வருடம் பூராவும் அந்த குழந்தைகள் பசி இல்லாமல் சாப்பிட ஒரு தொகையையும் மறக்காமல் வழங்குவார்கள். இதைப்போன்ற விருந்து அவர்களின் குடும்ப பிறந்த நாட்களிலும் தொடரும் என்கிறார்கள்.

அஜித்தையும்,அவரது குடும்பத்தையும் அந்த ஆதரவற்ற குழந்தைகள் மனதாற வாழ்த்தி அனுப்புகின்றனர். பிறருக்கு கொடுத்து வாழ்வதில் தான் எத்தனை மகிழ்ச்சி..!!

161 total views, 1 views today