விஜய் அட்லீ படத்தில் விஜய்க்கு வில்லன் ரெடி

விஜய் அட்லீ படத்தில் விஜய்க்கு வில்லன் ரெடி

tamil-cinema-news

விஜய்-ஜோதிகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘குஷி’. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இப்படம் இன்றளவும் விஜய் ரசிகர்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

வெற்றிப்பட இயக்குனர்களில் ஒருவராக வலம்வந்த எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தை மூட்டை கட்டிவைத்து விட்டு தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய் 61’ படத்தில் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக படக்குழு எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

232 total views, 3 views today