100 ரூபாயில் வேட்டி… ராம்ராஜ் காட்டன் அதிரடி சலுகை

100 ரூபாயில் வேட்டி… ராம்ராஜ் காட்டன் அதிரடி சலுகை

tamil-cinema-news

தமிழகத்தில் வேட்டி வாரத்தை பிரபலபடுத்தும் நோக்கிலும், அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனம், 100 ரூபாய் என்ற ஒரே விலையில், வேட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.

ஆண்டுதோறும், ஜனவரி மாதம் 6- ஆம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டும், நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், இளம் தலைமுறையினர் மத்தியில் வேட்டியை பிரபலபடுத்தும் நோக்கிலும், சலுகை விலையில் வேட்டியை வழங்க இருப்பதாக ராம்ராஜ் காட்டன் நிறுவனம் கூறியுள்ளது.

100 ரூபாய் என்ற சலுகை விலையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரையில், ஒரு வார காலத்திற்கு வேட்டி விற்பனையை முன்னெடுக்க உள்ளதாகவும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source:puthiyathalaimurai

43 total views, 1 views today